/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவுப் பொருளில் ரசாயன எச்சத்துக்கு வரம்பு
/
உணவுப் பொருளில் ரசாயன எச்சத்துக்கு வரம்பு
ADDED : ஜூலை 31, 2025 10:04 PM
கோவை; பாரதீய கிசான் சங்க ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் அறிக்கை:
பாரதீய கிசான் சங்க, தேசிய நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இதில், அனைவருக்கும் சத்தான, விஷமற்ற உணவு கிடைப்பதை உறுதி செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள், ரசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாட்டால், பெரும்பாலான உணவு தானியங்களில் ரசாயன நச்சு கலந்து விட்டது.
எனவே, அனைத்து உணவு தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில், ரசாயன எச்சங்களுக்கான தரநிலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை, மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.