தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஸ்வீட்கார்ன் சீஸ் ரோல் 

ஸ்வீட்கார்ன் சீஸ் ரோல் 

ஸ்வீட்கார்ன் சீஸ் ரோல் 


UPDATED : மே 16, 2026 05:14 PM

ADDED : மே 16, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2026 05:14 PM ADDED : மே 16, 2026 05:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்வீட்கார்ன் சீஸ் ரோல் என்பது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு மொறுமொறுப்பான மாலை நேர சிற்றுண்டி. வேகவைத்த சோளம் மற்றும் சீஸ் ஆகியவற்றை மசாலாப் பொருட்களுடன் சேர்த்து, பிரெட் அல்லது ஸ்பிரிங் ரோல் ஷீட்களில் வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் சுவையான உணவு. தேவையான பொருட்கள் :

ஸ்வீட்கார்ன்: 1 கப் (வேகவைத்தது)சீஸ்: 1/2 கப் (துருவியது)வெங்காயம்: 1 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய்: 1 (பொடியாக நறுக்கியது)மிளகாய் துாள் அல்லது சில்லி பிளேக்ஸ் - அரை ஸ்பூன், மிளகுத்தாள் அரை ஸ்பூன், கரம் மசாலா 1/4 ஸ்பூன், மற்றும் தேவையான அளவு உப்புகொத்தமல்லி தழை: சிறிதளவு (பொடியாக நறுக்கியது)பிரெட் துண்டுகள்: 8 முதல் 10மைதா மாவு: 2 ஸ்பூன் எண்ணெய்: பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறைஸ்டப்பிங் தயார் செய்தல்:ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட்கார்ன், துருவிய சீஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை மற்றும் மசாலாப் பொருட்கள் (மிளகாய் துாள், மிளகுத்துாள், கரம் மசாலா, உப்பு) ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.மைதா பேஸ்ட்:ஒரு சிறிய கிண்ணத்தில் மைதா மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ளவும்.பிரெட் ரோல் செய்தல்: ஒவ்வொரு பிரெட் துண்டின் ஓரங்களையும் (Edges) கத்தியால் வெட்டி நீக்கிவிடவும். பிரெட்டை லேசாக தண்ணீர் அல்லது பாலில் நனைத்து, உடனே கைகளால் அழுத்தி தண்ணீரை பிழிந்துவிடவும்.இப்போது இந்த பிரெட்டின் நடுவே, செய்து வைத்துள்ள ஸ்வீட்கார்ன்-சீஸ் கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் வைக்கவும். பிரெட்டை இறுக்கமாக மடித்து, உருளை வடிவ அல்லது நீள வடிவில் செய்து கொள்ளவும். பிரெட் ஓட்டைகளில் மைதா பேஸ்டை தடவி நன்கு ஒட்டவும். பொரித்தெடுத்தல்:வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்துள்ள ரோல்களை மிதமான தீயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்.

இதை தக்காளி சாஸ், அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம். இந்த ஸ்வீட்கார்ன் சீஸ் ரோலை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள், மேலும் இது மாலை நேர சிற்றுண்டியாகவும், பிறந்தநாள் பார்ட்டிகளுக்கும் ஏற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us