UPDATED : மே 16, 2026 05:13 PM
ADDED : மே 16, 2026 05:11 PM

மிதமான அளவில் மற்றும் சரியான முறையில் (காய்கறிகளுடன்) உட்கொள்ளும் போது, பாஸ்தா உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் ஒரு ஆரோக்கியமான உணவாகும். இது நல்ல கார்போஹைட்ரேட் மூலம் நீண்ட நேரம் ஆற்றலை வழங்குதல், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பி வைட்டமின்களை வழங்குகிறது. பாஸ்தாவில் இயற்கையாகவே கொழுப்பு குறைவாகவும், கொலஸ்ட்ரால் இல்லாமலும் இருப்பதால், அது இதயத்திற்கு உகந்த ஒரு தேர்வாக அமைகிறது; குறிப்பாக, புதிய மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களுடன் சேர்த்து உண்ணும்போது இது மிகவும் சிறந்தது.
வீட்டில் பாஸ்தா செய்வது
தேவையான பொருட்கள்:
1/4 கிலோ பாஸ்தா3 வெங்காயம்50 கிராம் பட்டர்4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்2 பெரிய தக்காளி1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது1/4 ஸ்பூன் மல்லித் துாள்1/2 ஸ்பூன் மிளகாய்த் துாள்1/4 ஸ்பூன் சீரகத் துாள்1/2 ஸ்பூன் கரம் மசாலா துாள்1_1/4 ஸ்பூன் இத்தாலியன் பாஸ்தா மசாலா துாள்15 பீன்ஸ்1 கப் பச்சைபட்டாணி2 கேரட் துருவல்தேவையான அளவுஉப்பு2 ஸ்பூன் டொமட்டோ கெட்சப்2 ஸ்பூன் சோயா சாஸ்செய்முறை:
பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு உப்பு 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேகவிடவும் 8-10 நிமிடங்கள் வரை வேகவிடவும். கிள்ளி பார்த்தால் ரப்பர் மாதிரி இல்லாம கட் ஆக வேண்டும். பதம் குழைய விட கூடாது. பிறகு, வடிகட்டி குளிர்ந்த நீர் ஊற்றி அலசி கொள்ளவும். ஒரு தாம்பாளத்தில் போட்டு சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரட்டி விடவும்வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். மல்லித் துாள், சீரகத்துாள், மிளகாய்த்துாள், கரம் மசாலா துாள் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய பீன்ஸ் பட்டாணி சேர்த்து வதக்கவும். காய்கறிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும். தக்காளி கெட்சப் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும். எல்லாம் சேர்ந்து ஒரு நிமிடம் வரை நன்கு வதக்கவும். வேகவைத்த பாஸ்தா சேர்த்து துருவிய கேரட் சேர்த்து நன்கு கிளறவும். எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கிய பின் பாஸ்தா துாளை பரவலாக துாவி இறக்கவும்.
சுவையான ஆரோக்கியமான மசாலா பாஸ்தா ரெடி
