/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்கவால் குரங்குகள் நடமாட்டம்: கட்டுப்படுத்த கோரிக்கை
/
சிங்கவால் குரங்குகள் நடமாட்டம்: கட்டுப்படுத்த கோரிக்கை
சிங்கவால் குரங்குகள் நடமாட்டம்: கட்டுப்படுத்த கோரிக்கை
சிங்கவால் குரங்குகள் நடமாட்டம்: கட்டுப்படுத்த கோரிக்கை
ADDED : நவ 06, 2024 09:22 PM

வால்பாறை; வால்பாறை, குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிங்கவால் குரங்குகளை கட்டுப்படுத்த, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்த குரங்குகள் வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கொட்டைகளை உணவாக உட்கொள்கின்றன.
இந்நிலையில், புதுத்தோட்டம் வனப்பகுதியில் மட்டுமே உலா வந்த சிங்கவால் குரங்குகள், சமீப காலமாக வால்பாறை நகரிலும் உலா வருகின்றன. வீடுகளில் முகாமிடும் சிங்கவால் குரங்குகள், ஜன்னல் வழியாக சமையல் அறைக்கு சென்று, உணவு பொருட்களை சேதப்படுத்துகின்றன.
இது தவிர, பள்ளி வளாகத்தில் புகுந்து மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால், வால்பாறை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் வீட்டின் ஜன்னலை கூட திறந்து வைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சிங்கவால் குரங்குகள் சேட்டை செய்கின்றன. வீட்டில் நுழையும் சிங்கவால் குரங்குகள், ஓடு மற்றும் மேற்க்கூரையை சேதப்படுத்தி திண்பண்டங்களை தேடி எடுத்து செல்கின்றன. மக்களை அச்சுறுத்தி வரும், சிங்கவால் குரங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.