/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பலாப்பழ சீசன் துவக்கம் சிங்கவால் குரங்குகள் குஷி
/
பலாப்பழ சீசன் துவக்கம் சிங்கவால் குரங்குகள் குஷி
ADDED : மே 26, 2025 10:42 PM
வால்பாறை,; வால்பாறையில், பலாப்பழ சீசன் துவங்கியதால், சிங்கவால் குரங்குகள் மகிழ்ச்சியடைந்துள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறையில், வரையாடு, சிங்கவால் குரங்குகள், புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
அங்கு, தற்போது பெய்யும் பருவமழையால், வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வனப்பகுதியிலேயே கிடைப்பதால், அவை வனத்துக்குள்ளேயே வலம் வருகின்றன.
வால்பாறை அடுத்துள்ள புதுத்தோட்டம் பகுதியில், உலகின் அரிய வகை வனவிலங்குகளில் ஒன்றான சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன. இவை, வனப்பகுதியில் கிடைக்கும் பழம், கொட்டைகளை உட்கொள்கின்றன.
இந்நிலையில், புதுத்தோட்டம் பகுதியில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால், சிங்கவால் குரங்குகளுக்கு தேவையான உணவு அங்கு கிடைக்கிறது.
இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில், 'பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் சிங்கவால் குரங்குகள் துள்ளி விளையாடும் போது, வாகனத்தில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க, ஏழு இடங்களில் ஊஞ்சல் கட்டப்பட்டுள்ளது. மேலும், நாள் தோறும் அவற்றை கண்காணிக்க வனத்துறை வேட்டை தடுப்புக்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்,' என்றனர்.