ADDED : ஜூலை 13, 2026 08:41 AM
கோவை: சிங்கப்பெண் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இரண்டாம் கட்டமாக கூடுதல் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி கோவை மாநகரம், மாவட்ட எல்லைகளில் கூடுதலாக குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களும் தயார்நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
இத்திட்டத்தின் செயல்பாட்டில் முக்கிய சவால் ஆட்கள் பற்றாக்குறை. ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் போதுமான போலீசார் இல்லாத சூழலில், புதிய திட்டங்களுக்கான போலீசாரை வேறு பிரிவுகளில் இருந்து மாற்றும் நடைமுறையே பின்பற்றப் படுகிறது.
ஒரு பிரிவில் பணியாற்றியவர்கள் மற்றொரு திட்டத்திற்கு மாற்றப்படுவதால், இரு பிரிவுகளின் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. பெயரளவில் குழுக்கள் உருவாக்கப்பட்டாலும், போதுமான நிரந்தர பணியாளர்கள் இல்லாததால் திட்டங்களின் முழு நோக்கம் அடைவதில் சிரமம் உள்ளது.
ஆகவே சிங்கப்பெண் அதிரடிப்படைக்கான, 2,500 புதிய பணியிடங்களை விரைவில் நியமிக்க வேண்டுமென போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
