/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவள்ளுவர் தினத்தில் மது பதுக்கி விற்பனை
/
திருவள்ளுவர் தினத்தில் மது பதுக்கி விற்பனை
ADDED : ஜன 18, 2024 12:10 AM
கோவை : திருவள்ளுவர் தினத்தில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த, 19 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 194 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இதனை பயன்படுத்தி, மாநகரில் பல்வேறு இடங்களில் கள்ளத்தனமாக சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.
இதையடுத்து மாநகர போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சாய்பாபா காலனி, துடியலுார், ராமநாதபுரம், சிங்காநல்லுார், பீளமேடு, ரத்தினபுரி உட்பட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதிகளில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, 19 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 194 மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.