/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கடை 3 நாட்கள் மூட உத்தரவு
/
மதுக்கடை 3 நாட்கள் மூட உத்தரவு
ADDED : ஜன 13, 2024 01:55 AM
கோவை;கோவை மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூன்று நாட்கள் மூடுவதற்கு, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டிருக்கிறார்.
கோவை மாவட்டத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்கும் கடைகள் உள்ளன.
இக்கடைகள் வரும், 16ம் தேதி - திருவள்ளுவர் தினம், வடலுார் ராமலிங்கர் நினைவு தினமான 25ம் தேதி, குடியரசு தினமான 26ம் தேதி, ஆகிய மூன்று நாட்கள் செயல்படக்கூடாது.
விதிமுறைகளுக்கு முர ணாக, அறிவிக்கப்பட்டுள்ள தேதிகளில் மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் எச்சரித்திருக்கிறார்.