ADDED : செப் 05, 2025 09:50 PM
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே, தூத்துக்குடியைச்சேர்ந்த சங்கர், 45, என்பவர் மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்ததைக்கண்டனர்.
போலீசார் அவரிடம் விசாரித்ததில், 19 மது பாட்டில்கள் இருந்தது உறுதியானது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, வடபுதூர் அரசு மதுபான டாஸ்மாக் கடை அருகே, மயிலேரிபாளையத்தைச் சேர்ந்த குமார், 47, என்பவரிடமிருந்து 19 மது பாட்டில்களும், சிக்கலாம்பாளையம் அரசு மதுபான டாஸ்மாக் கடை அருகே வடபுதூரை சேர்ந்த ராமு, 29, என்பவரிடமிருந்து 21ம்
என மொத்தம், 59 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், மது விற்பனையில் ஈடுபட்ட மூவரும் கைது செய்யபட்டனர்.