/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பட்டியல் 'ரிலீஸ்'! வாக்காளர்கள் புள்ளிவிபரம் வெளியீடு
/
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பட்டியல் 'ரிலீஸ்'! வாக்காளர்கள் புள்ளிவிபரம் வெளியீடு
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பட்டியல் 'ரிலீஸ்'! வாக்காளர்கள் புள்ளிவிபரம் வெளியீடு
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பட்டியல் 'ரிலீஸ்'! வாக்காளர்கள் புள்ளிவிபரம் வெளியீடு
ADDED : அக் 29, 2024 08:59 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை சட்டசபை தொகுதிகளில், வரைவு வாக்காளர் பட்டியல், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.நவ.,16, 17ம் தேதி மற்றும், 23, 24ம் தேதிகளில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் உள்ள, ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, பட்டியலை வெளியிட்டார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், பொள்ளாச்சி தொகுதியில், ஆண்கள், 1,08,863; பெண்கள், 1,19,584; மூன்றாம் பாலினத்தவர்கள், 42 பேர், என மொத்தம், 2,28,489 வாக்காளர்கள் உள்ளனர்.
வால்பாறை தனி தொகுதியில், ஆண்கள், 94,712; பெண்கள் 1,04,436; மூன்றாம் பாலினத்தவர்கள், 25 பேர் என மொத்தம், 1,99,173 வாக்காளர்கள் உள்ளனர்.
கிணத்துக்கடவு தொகுதியில், ஆண்கள், 1,67,728; பெண்கள், 1,75,578; மூன்றாம் பாலினத்தவர்கள், 45 பேர் என மொத்தம், 3,43,351 வாக்காளர்கள் உள்ளனர்.
அனைத்து தொகுதியிலும், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகளவு உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, வாக்காளர் வரைவு பட்டியல், சப் - கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என, வாக்காளர்கள் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இதையடுத்து, இன்று முதல், நவ., 28ம் தேதி மாலை வரை விண்ணப்பங்களை நேரில் அளிக்கலாம்.
வரும் நவ.,16ம் தேதி, 17ம் தேதி மற்றும், 23 மற்றும், 24ம் தேதிகளில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் உள்ள, நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
எனவே, 2025 ஜன.,1ம் தேதியில், 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்கள் நீக்கம் செய்ய வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும், www.vsp.in என்ற இணையதளம் வாயிலாகவும், 'வோட்டர் ெஹல்ப்லைன்' என்ற மொபைல் செயலி வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய, ஆதார் எண் இணைத்திட வரும், நவ.,28ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும்.
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க படிவம் - 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் - 7, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம் - 6பி, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், புதிய குடியிருப்பு முகவரி மாற்றம் செய்ய படிவம் - 8பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
பொதுமக்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு, கூறினர்.