/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்துறையின் தேவைகளை காது கொடுத்து கேளுங்க! பட்ஜெட்டுக்கு முன் கூட்டுக்கமிட்டி அமைக்க தொழில் துறை கோரிக்கை
/
தொழில்துறையின் தேவைகளை காது கொடுத்து கேளுங்க! பட்ஜெட்டுக்கு முன் கூட்டுக்கமிட்டி அமைக்க தொழில் துறை கோரிக்கை
தொழில்துறையின் தேவைகளை காது கொடுத்து கேளுங்க! பட்ஜெட்டுக்கு முன் கூட்டுக்கமிட்டி அமைக்க தொழில் துறை கோரிக்கை
தொழில்துறையின் தேவைகளை காது கொடுத்து கேளுங்க! பட்ஜெட்டுக்கு முன் கூட்டுக்கமிட்டி அமைக்க தொழில் துறை கோரிக்கை
ADDED : பிப் 17, 2025 12:22 AM

கோவை; இம்மாதம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் கேட்க வேண்டும்; வேளாண், தொழில்துறையினரை இணைத்து கூட்டுக் கமிட்டி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போதைய தி.மு.க., அரசின் கடைசி முழு பட்ஜெட், இம்மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண்மைக்கு என, தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது.
ஆனால், இவ்வாறான கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு, அனைத்து தொழில்துறை பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து, கருத்துக் கேட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, தொழில் துறையினர் கூறியதாவது:
தொழில்துறையைப் பொறுத்தவரை, ஒரு சில உயர் தொழில்அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் மட்டும் கருத்து கேட்கின்றனர். அவர்கள், கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டாலும், பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்கவே செய்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில பட்ஜெட்களில் எந்த நீண்ட கால கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டதில்லை.
எனவே, தொழில்துறையின் உண்மையான தேவைகளைக் கேட்டு நிவர்த்தி செய்ய, பட்ஜெட்டுக்கு முன் அனைத்து தொழில்முனைவோர் தரப்பிலும், கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.
உதாரணமாக, ஜவுளித் துறையை எடுத்துக் கொண்டால், தமிழகத்தின் பருத்தி தேவை ஆண்டுக்கு 110 லட்சம் பேல். ஆனால், உற்பத்தி 2.9 லட்சம் பேல் மட்டுமே. தினமும் 30 ஆயிரம் பேல் தேவைப்படுகிறது.
எனவே, பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, ஜவுளித்துறையினர், விவசாயிகள், அரசுத் துறை அடங்கிய முத்தரப்பு கமிட்டியை உருவாக்கி, அவர்கள் மூலம் கருத்தைப் பெற, அரசு முயற்சி செய்ய வேண்டும்.
நூற்றாண்டு கடந்த ஜவுளிப் பாரம்பரியம் கோவையுடையது. ஆனால், பருத்தி மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட அத்துறைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய, நடவடிக்கை இல்லை.
ஜவுளி, விவசாயம் இணைந்த குழுவால்தானே, இதற்கான பிரச்னைகளை ஆராய்ந்து, ஆலோசனைகளை முன்வைக்க முடியும். இதை மனதில் கொண்டு, அரசு செயல்பட வேண்டும்.
தங்கள் துறையின் தேவைகளை, ஆலோசனைகளைச் சொல்பவர்களை இந்த அரசு, எதிரிகளாகப் பார்க்கிறது.
அதைத்தவிர்த்து, பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனில், அனைத்துத் தரப்பினரின் கருத்தையும், கேட்க வேண்டும்.
இவ்வாறு, தொழில்துறையினர் தெரிவித்தனர்.
தங்கள் துறையின் தேவைகளை, ஆலோசனைகளைச் சொல்பவர்களை இந்த அரசு, எதிரிகளாகப் பார்க்கிறது. அதைத்தவிர்த்து, பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனில், அனைத்துத் தரப்பினரின் கருத்தையும், கேட்க வேண்டும்.

