/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலைக்கல்லுாரியில் இலக்கிய மன்றம் துவக்கம்
/
அரசு கலைக்கல்லுாரியில் இலக்கிய மன்றம் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2025 09:29 PM

வால்பாறை; வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், இலக்கிய மன்றத்துவக்க விழா முதல்வர் ஜோதிமணி தலைமையில் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைகழகம் பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சுபாஅருணாசலம் விழாவை துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், ''மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மை ஒரு போதும் இருக்ககூடாது. தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே குறிக்கோளை எட்ட முடியும். படிக்கும் வயதில் மனதில் தேவையற்ற சிந்தனைகளுக்கு மாணவர்கள் இடம் தரக்கூடாது.
கல்வியால் மட்டுமே ஒருவர் உயர்ந்த நிலையை அடையமுடியும் என்பதை உணர்ந்து, நல்ல முறையில் படித்தாலே மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்,'' என்றார். தமிழ்த்துறை பேராசிரியர் தமிழ்கனி நன்றி கூறினார்.

