/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவர்களுக்கு இலக்கிய போட்டி
/
கல்லுாரி மாணவர்களுக்கு இலக்கிய போட்டி
ADDED : ஆக 03, 2025 09:38 PM
கோவை; தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறையும் இணைந்து கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை போட்டி, பேச்சு போட்டி, ஓவியபோட்டி, நாடகம் போட்டிகளை நடத்துகின்றனர். வரும் 9ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அரங்கில் நடக்கும் இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மாணவர்கள் தங்கள் பெயர், பயிலும் கல்லுாரி, பங்கேற்கும் போட்டி, மொபைல் எண் ஆகிய விபரங்களை, 8122499492 மற்றும் 93459 44439 என்ற வாட்ஸ் -அப் எண்களில் வரும், 6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.