ADDED : மார் 03, 2024 08:59 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தம்பு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா நடந்தது.
விழாவுக்கு தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். கடலூர் லட்சுமி சோராடியா கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர் புலவர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 'உயர்வு உன் உள்ளங்கையில்' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியத்தில் உள்ள ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை எடுத்துக் கூறினார்.
விழாவில், கல்வி இயக்குனர் குணசேகர், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தமிழ் ஆசிரியர்கள் விவேகானந்தன், கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர்.
