/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா தினத்தில் கலகலப்பு; கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு
/
சுற்றுலா தினத்தில் கலகலப்பு; கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு
சுற்றுலா தினத்தில் கலகலப்பு; கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு
சுற்றுலா தினத்தில் கலகலப்பு; கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு
ADDED : செப் 30, 2024 11:46 PM
கோவை : கோவை அரசு கலைக் கல்லுாரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை, தமிழக அரசின், கோவை சுற்றுலாத்துறை, சார்பில், உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரியில், ஓவியம் வரைதல், முக ஓவியம் வரைதல், புதிய வணிக யோசனைகள் போட்டிகள் நேரடியாகவும், ப்ளையர் வடிவமைப்பு, புகைப்படம் எடுத்தல் போட்டிகள் இணைய வழியாகவும் நடத்தப்பட்டன.
உலக சுற்றுலா தினத்தை நிறைவு செய்யும் நிகழ்வாக, கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை தலைவர் சங்கீதா வரவேற்றார்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறையின் உதவி பேராசிரியர் தாமரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.