/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாநகராட்சியின் 59 பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., வகுப்பு துவக்கம்; மாமன்ற கூட்டத்தில் அனுமதி

ADDED : மே 15, 2025 11:38 PM
கோவை; மாநகராட்சி ஆரம்ப, நடுநிலை என புதிதாக, 59 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படவுள்ளன.
மாநகராட்சியில், 19 நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி மையங்கள் செயல்படும் மாநகராட்சி ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், அதிக எண்ணிக்கையுள்ள, 50 பள்ளிகளில் இவ்விரு வகுப்புகளும் துவங்கப்படும் என, 2025-26 மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இவ்வகுப்புகளுக்கு தேவைப்படும் பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு ஊதியம் வழங்கவும், தேவையான கற்பித்தல் பாடக்குறிப்பேடுகள் வழங்கவும், வகுப்பறைகள் கட்டவும், இந்நிதியாண்டில் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சியின் கீழ் உள்ள எட்டு நடுநிலை மற்றும், 51 ஆரம்பப் பள்ளிகள் என, 59 பள்ளிகளில் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்க, நேற்றைய மாமன்ற அவசர கூட்டத்தில், அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, ம.ந.க., வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில், இரு அங்கன்வாடி மையங்கள், நீலிக்கோனாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஒன்று, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மூன்று உட்பட எட்டு பள்ளிகளில் உள்ள, 12 மையங்களிலும், மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளை பொறுத்தவரை, ஒக்கிலியர்காலனியில் ஆறு மையங்கள் உட்பட, 88 மையங்கள் என, 100 மையங்களில் இவ்விரு படிப்புகள் பயிற்றுவிக்கப்படவுள்ளன.