/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ - சேவை மையத்திலும் எல்.எல்.ஆர்., பெறலாம்!
/
இ - சேவை மையத்திலும் எல்.எல்.ஆர்., பெறலாம்!
ADDED : மார் 13, 2024 01:06 AM
கோவை;இனி, இ-சேவை மையங்கள் மூலமாக, வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எல்.எல்.ஆர்., பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், இடைத்தரகர்கள், தனியார் பிரவுசிங் சென்டர்களை அணுக வேண்டிய நிலை இருக்கிறது.
இதை தவிர்க்க, மாநிலம் முழுவதும் இ-சேவை மையங்கள் மூலம் எல்.எல்.ஆர்., பெற விண்ணப்பிக்கும் நடைமுறை, இன்று (13ம் தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது.
சேவை கட்டணமாக, ரூ.60 செலுத்தினால் போதும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்.எல்.ஆர்., படிவத்தை, விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதேபோல், மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளான ஓட்டுனர் உரிமம், பெர்மிட், உரிமை மாற்றம் உள்ளிட்டவற்றை, இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளார்.

