/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தாய்கோ' வங்கி கிளையில் ரூ.20 லட்சம் வரை கடன்
/
'தாய்கோ' வங்கி கிளையில் ரூ.20 லட்சம் வரை கடன்
ADDED : நவ 14, 2024 05:15 AM
கோவை: தமிழக அரசின் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி (தாய்கோ) கிளையில், குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு, 'கலைஞர் கடன் உதவி' திட்டத்தின் கீழ், 7 சதவீத வட்டியில், ரூ.20 லட்சம் வரை, அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்பட உள்ளது.
திட்டத்தில், குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது, 65க்கு மிகாமலும் இருக்க வேண்டும். புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள், பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள், விதிமுறைக்கு உட்பட்டு, குறைந்த வட்டிக்கு மாற்றிக் கொள்ளலாம்.
விபரங்களுக்கு, கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மற்றும் காந்திபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, ராஜி நாயுடு லேஅவுட்டில் உள்ள தாய்கோ வங்கி கிளை (0422--2529207), ஒண்டிப்புதுார், திருச்சி சாலையில் உள்ள கிளை (0422- -2270011), பொள்ளாச்சி, மார்க்கெட் சாலை, முதல் தளத்தில் உள்ள தாய்கோ வங்கி கிளைகளில் (0422 - 220011) உள்ள மேலாளர்களை அணுகி பயன் பெற, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.