/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் துவங்க மானியத்துடன் கடன்
/
தொழில் துவங்க மானியத்துடன் கடன்
ADDED : ஜன 03, 2026 05:16 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில், தொழில் முனைவோருக்கான வழிகாட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில், கோவை மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குனர் சேதுராமன் பேசுகையில், ''பொதுவாக, உற்பத்தி தொழில், சேவை தொழில், விற்பனை தொழில் என, மூன்று வகையான தொழில்கள் உள்ளன. இதில், இளைஞர்கள் தங்களுக்கு உரிய தொழிலை செய்ய, அனைத்து ஆலோசனைகளும் வசதிகளும் வழங்கப்படுகின்றன,'' என்றார்.
மாவட்ட முன்னோடி வங்கியின் நிதி சார் கல்வி ஆலோசகர் ரவி, சவுத் இந்தியன் வங்கி நிதி சார் கல்வி ஆலோசகர் அனாமிகா, தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் பங்கேற்றனர்.

