/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
7.95 லட்சம் பேருக்கு ரூ.8,830 கோடி கடன்
/
7.95 லட்சம் பேருக்கு ரூ.8,830 கோடி கடன்
ADDED : நவ 24, 2024 11:45 PM
கோவை; கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில், மூன்று ஆண்டுகளில், ரூ.8,830 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், 2021 ஏப்., முதல் 2024 அக்., 31 வரை, கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில், ஒரு லட்சத்து 5,085 விவசாயிகளுக்கு, 1,367.56 கோடி அளவுக்கு பயிர்க்கடன், 17 ஆயிரத்து 443 விவசாயிகளுக்கு, 116.39 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம், 37 ஆயிரத்து 864 விவசாயிகளுக்கு 463.16 கோடி மதிப்பில் மத்திய கால கடன், 5 லட்சத்து 63 ஆயிரத்து 453 உறுப்பினர்களுக்கு, 5213.76 கோடி மதிப்பில் நகைக்கடன், 32 ஆயிரத்து 575 குழுக்களுக்கு, 280.28 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கடன், 39 ஆயிரத்து 248 உறுப்பினர்களுக்கு, 1,389.01 கோடியில் இதர கடன்கள் என, 7 லட்சத்து 95 ஆயிரத்து 668 உறுப்பினர்களுக்கு 8,830.70 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.