/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவ., 23ல் உள்ளாட்சி தின கிராம சபைக்கூட்டம்
/
நவ., 23ல் உள்ளாட்சி தின கிராம சபைக்கூட்டம்
ADDED : நவ 11, 2024 05:27 AM
உடுமலை : கிராமங்களில் அரசின் நலத்திட்டங்கள், பயனாளிகள் தேர்வுக்கான ஒப்புதல், துாய்மை முகாம், வேலை உறுதி திட்டம், திட்டப்பணிகளுக்கான செலவினங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும்,
கிராமங்களில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து, அறிந்துகொள்வதற்கான கூட்டமாக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. குடியரசு தினம், மே தினம், காந்திஜெயந்தி, சர்வதேச தண்ணீர் தினம், சுதந்திர தினம் மற்றும் உள்ளாட்சி தினங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
தற்போது நவ., 2ம் தேதி உள்ளாட்சி தினத்தையொட்டி நடக்க இருந்த சிறப்பு கிராம சபைக்கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
உடுமலை ஒன்றியத்தில், இக்கூட்டம், நவ., 23ம் தேதி நடத்தப்படுவதற்கு அன்று காலை, 11:00 மணிக்கு டத்துவதற்கு ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.