/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரி செலுத்துவதில் மக்கள் அலட்சியம் திணறும் உள்ளாட்சி அதிகாரிகள்
/
வரி செலுத்துவதில் மக்கள் அலட்சியம் திணறும் உள்ளாட்சி அதிகாரிகள்
வரி செலுத்துவதில் மக்கள் அலட்சியம் திணறும் உள்ளாட்சி அதிகாரிகள்
வரி செலுத்துவதில் மக்கள் அலட்சியம் திணறும் உள்ளாட்சி அதிகாரிகள்
ADDED : ஏப் 01, 2025 10:25 PM
பொள்ளாச்சி,; பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் முறையான அனுமதி பெறாமலும், தொழில் மற்றும் சொத்துவரி செலுத்தாமலும், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. அவ்வகையில், பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசுகளில் மானியக்குழு நிதி, மாவட்ட திட்ட நிதி என, பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், தொழில் வரி வருவாய் உள்ளிட்டவை பொது நிதி கணக்கில், சேர்க்கப்படுகிறது. இருப்பினும், சில ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், முறையான அனுமதி பெறாமலும், தொழில் மற்றும் சொத்துவரி செலுத்தாமலும், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
உள்ளாட்சி அதிகாரிகள் கூறியதாவது: பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல், அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன.
இதற்கு, அரசியல் கட்சியினரும் துணை நிற்கின்றனர். தொழில் நிறுவனங்கள் செயல்பட துவங்கினால், பணியாளர்களின் நலன் கருதி, அதனை தடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
சொத்துவரி செலுத்தாமல் இருப்பது, தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமல் இருத்தல் என, வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது. இதனால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நிதியாண்டு முடிந்தும், சொத்துவரி, தண்ணீர் வரி செலுத்தாமல் பலர் உள்ளனர்.
உள்ளாட்சி நிர்வாக பணியாளர்கள் வீடு தேடிச் சென்று, வரியை செலுத்த அறிவுறுத்தினாலும், அலட்சிய போக்குடன் செயல்படுகின்றனர். வரி ஏய்ப்பு கண்டறியப்படும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.

