/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேரோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை?
/
தேரோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை?
ADDED : ஜன 08, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் அருகே உள்ள மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறும் 10ம் தேதி உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோவில் அறங்காவலர் குழு சார்பில், கோவை கலெக்டரிடம் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாமில் மனு அளிக்கப்பட்டது. எனினும் இது குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் பக்தர்கள் கூறுகையில்,'அன்னுார் நகரை சுற்றியுள்ள அரசு பள்ளிகளுக்கு 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தால், பொதுமக்கள் தேர்த் திருவிழாவில் பங்கேற்க உதவியாக இருக்கும்', என்றனர்.

