UPDATED : ஆக 05, 2026 09:10 PM
ADDED : ஆக 05, 2026 08:53 PM
திருப்பூர் : சக் ஷம், ஸ்ரீ அக் ஷய பாத்திரம், மருதம் அறக்கட்டளை, ரோட்டரி அச்சீவர்ஸ் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சியை வரும் 16ம் தேதி காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை, திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் நடக்கிறது. பங்கேற்க பதிவு இலவசம். ஜாதி, மத வேறுபாடுமின்றி அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம். வரன் தேடும் மாற்றுத்திறனாளிகள், அவர்கள் குடும்பத்தினர் நேரில் சந்தித்து பேசி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
விவரங்கள் பெற, 93621 - 93301 மற்றும் 95148 - 14997.
கூடுதல் பஸ் வேண்டும்
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சி முதல் கோவை வரை கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு, மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி உள்ளிட்ட பல பஸ் ஸ்டாப்புகளில் நிறுத்தப்படுகின்றன.
பொள்ளாச்சி, கோவை பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து, 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் சென்றாலும், காலை, மாலை அதிக பயணியர் பயணிக்கின்றனர். ஒரு சில பஸ்களில் படியில் தொங்கிய படி பயணிக்கின்றனர்.
இதை தவிர்க்க காலை, மாலையில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும். ரோந்து போலீசார் படியில் தொங்கியபடி செல்வோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தக்காளி விலை சரிவு
உடுமலை: பருவமழை இல்லாமல், மகசூல் குறைந்துள்ள நிலையில், சந்தைகளில் தக்காளி விலை சரிந்து வருவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதியில், ஆண்டு முழுவதும் கிணற்றுப்பாசனத்துக்கு தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
கேரளாவுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், இப்பகுதியில் இருந்து தக்காளி அனுப்புவதால், தக்காளி வர்த்தகத்தில் உடுமலை சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பெய்யாமல், கிணறு மற்றும் போர்வெல்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது. நாற்று நடவு செய்த பிறகு போதிய மழை இல்லாததால், செடிகளின் வளர்ச்சி பாதித்தது.
வழக்கமாக ஏக்கருக்கு, பாரம்பரிய ரகங்கள், 10 முதல் 15 டன் வரையும், வீரிய ஒட்டு ரகங்கள் 25 முதல் 35 டன் வரையும் மகசூல் கிடைக்கும். இந்தாண்டு மழை இல்லாதது, அதிக வெயில் உள்ளிட்ட காரணங்களால், தக்காளி மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. சந்தையில் விலை சரிந்து வருகிறது. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடுதல் பஸ் வேண்டும்
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சி முதல் கோவை வரை கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு, மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி உள்ளிட்ட பல பஸ் ஸ்டாப்புகளில் நிறுத்தப்படுகின்றன.
பொள்ளாச்சி, கோவை பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து, 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் சென்றாலும், காலை, மாலை அதிக பயணியர் பயணிக்கின்றனர். ஒரு சில பஸ்களில் படியில் தொங்கிய படி பயணிக்கின்றனர்.
இதை தவிர்க்க, காலை, மாலையில் கூடுதல் பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோந்து போலீசார் படியில் தொங்கியபடி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
