ADDED : ஆக 05, 2026 11:32 PM

அ நிறம் | அளவு
ஈச்சனாரி: கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் மணிவேந்தன், 31, கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 19 வயது மாணவி, ஈச்சனாரி தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு படிக்கிறார். நேற்று காலை கல்லுாரிக்கு வர, தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது போலீஸ்காரர் ஒருவர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, தன் தோழியரிடமும், போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ரியாஸ்கானிடமும் மாணவி கூறியுள்ளார். விசாரணையில், போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனில் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக பணிபுரியும், உடுமலையை சேர்ந்த மணிவேந்தன் என தெரிந்தது.
இதையடுத்து, பேரூர் சரக மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மாணவி அளித்த புகாரில் வழக்கு பதிந்த போலீசார், மணிவேந்தனை கைது செய்தனர்.
