/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூட்டி கிடக்கும் ஏ.டி.எம்.,: வாடிக்கையாளர்கள் தவிப்பு
/
பூட்டி கிடக்கும் ஏ.டி.எம்.,: வாடிக்கையாளர்கள் தவிப்பு
பூட்டி கிடக்கும் ஏ.டி.எம்.,: வாடிக்கையாளர்கள் தவிப்பு
பூட்டி கிடக்கும் ஏ.டி.எம்.,: வாடிக்கையாளர்கள் தவிப்பு
ADDED : பிப் 06, 2025 08:46 PM

வால்பாறை; ஏ.டி.எம்., மையம் பூட்டியே கிடப்பதால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
வால்பாறையிலிருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ள அய்யர்பாடி எஸ்டேட், போஸ்ட் ஆபீஸ் அருகில், தனியார் வங்கி ஏ.டி.எம்., அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி தொழிலாளர்கள், சுற்றுலா பயணியர் அதிகளவில் இந்த ஏ.டி.எம்.,யை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, ஏ.டி.எம்., பூட்டியே கிடப்பதால், தொழிலாளர்கள், சுற்றுலா பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. வால்பாறை நகருக்கு சென்று பணம் எடுத்து வர இயலாத நிலையில், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, இங்கு கடந்த ஆண்டு ஏ.டி.எம்., அமைக்கப்பட்டது.
ஆனால், இடையிடையே ஏ.டி.எம்.,ல் பணம் இல்லை எனக்கூறி பூட்டி விடுகின்றனர். இதனால், 8 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, தொழிலாளர்கள், சுற்றுலா பயணியர் நலன் கருதி ஏ.டி.எம்., வழக்கம் போல் திறக்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.