ADDED : மார் 15, 2026 04:36 AM
கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய 'லோக்அதாலத்' விசாரணை, ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா விசாரணையை துவக்கி வைத்தார்.
நிலுவையிலுள்ள வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
28 அமர்வுகளில், 7,368 வழக்கில் தீர்வு காணப்பட்டு, ரூ.80.21 கோடி பைசல் செய்யப்பட்டது.
ஐந்தாண்டுக்கும் மேல் நிலுவையிலிருந்த 154 வழக்குகளில் நிரந்தர தீர்வு காணப்பட்டது. குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, வழக்கு தாக்கல் செய்து, பிரிந்து வாழ்ந்த, 15 க்கும் மேற்பட்ட தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ தீர்வு காணப்பட்டது.
மதுக்கரையில் 2024 ல் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த ரஞ்சித்குமார் என்பவர் குடும்பத்திற்கு, ரூ.52.48 லட்சம், மேட்டுப்பாளையத்தில், 2013 ல் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த மனோஜ் என்பவருக்கு, ரூ.45.64 லட்சம், இழப்பீடு வழங்கப்பட்டது.
