ADDED : மார் 14, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், தேசிய 'லோக் அதாலத்' விசாரணை , கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.
நிலுவையிலுள்ள வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், சிவில் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன், நுகர்வோர் நீதிமன்றம் மற்றும் கடன் வசூல் தீர்ப்பாயம் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்றன.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா விசாரணையை துவக்கி வைக்கிறார்.
