தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பார்க்கும் பக்கம்... பங்கம்...! l வீசப்படும் பிளாஸ்டிக் பைகளால் அவலம்

பார்க்கும் பக்கம்... பங்கம்...! l வீசப்படும் பிளாஸ்டிக் பைகளால் அவலம்

பார்க்கும் பக்கம்... பங்கம்...! l வீசப்படும் பிளாஸ்டிக் பைகளால் அவலம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலுார்:நிலத்திலும், நீரிலும் மட்டுமல்ல... எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவு பரவி கிடக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கே சிக்கல் ஏற்படுத்தும் என தெரிந்திருந்தும், பலரின் அஜாக்கிரதை, இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவு சேர காணமாகிறது.

வீட்டில் இருந்து வெளியில் செல்வோர், வீடு திரும்பும் போது, பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கி வருவது சர்வ சாதாரணமாகி விட்டது. அருகில் இருக்கும் கடைக்கு சென்றாலும் கூட, பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கி வருவதை காண முடிகிறது. இதனால், திரும்பிய இடமெல்லாம் பிளாஸ்டிக் பொருட்கள் பரவி கிடக்கின்றன. காடுகள், மலைகள், நதிகள், விவசாய நிலங்கள், ஆறுகள், நீர் நிலைகளை இந்த பிளாஸ்டிக் அரக்கன் கபளீகரம் செய்து வருகிறது.

இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு யாருக்கும் தெரியாதது அல்ல. ஆனாலும், அதுகுறித்த அக்கறை இல்லாமல் இருக்கிறோம் என்பதே உண்மை. குப்பை என்பது சுகாதாரம் சார்ந்த பிரச்னை மட்டும் அல்ல. மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதில் அடங்கியுள்ளது. நீர் நிலைகள், விவசாய நிலங்களில் கொட்டப்படும் குப்பையால், மண் வளம் பாதித்து நீரும் கெடுகிறது. அரசு நிர்வாகங்கள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும், தடுத்தாலும், மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும்.

உள்ளாட்சிகள் தீவிரம்



கடந்த அக்., 2 முதல் மாநகராட்சி முதல் ஊராட்சிகள் வரை திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2026 விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. வீட்டில் இருந்து வெளியில் வரும் குப்பை கழிவுகள் நான்கு வகையாக பிரித்து தர வேண்டும், இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளன. இனியாவது, பிளாஸ்டிக் பயன்பாடு குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஒவ்வொருவரின் மனதிலும் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும். பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பப்படும் குழந்தைகள், வீட்டில் வந்து அதை கடைபிடிக்க துவங்கினால் அதை பெரியவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். மட்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என, அனைவரும் உறுதி ஏற்று அதை செயல்படுத்தினால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us