/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்லக்கில் இன்று கிருஷ்ணர் திருவீதி உலா
/
பல்லக்கில் இன்று கிருஷ்ணர் திருவீதி உலா
ADDED : செப் 19, 2025 09:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; பல்லக்கில் கிருஷ்ணர் திருவீதியுலா இன்று அன்னுாரில் நடைபெறுகிறது.
உலக புனித நாம விழா, ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில் செப்.17 முதல் 23ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கிருஷ்ணரை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 'இஸ்கான்' இயக்கம் சார்பில், 'கீதை காட்டும் பாதை' என்னும் சத் சங்கம் இன்று நடைபெறுகிறது. இன்று மாலை 5:00 மணிக்கு பகவான் கிருஷ்ணர் வீற்றிருக்கும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு அன்னுார் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருகிறது.
மாலை 6:30 மணிக்கு பகவத் கீதை சொற்பொழிவும், கிருஷ்ண பஜனையும் நடைபெறுகிறது.