/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புஷ்ப பல்லக்கில் மன்னீஸ்வரர் உலா; இன்று திருக்கல்யாண உற்சவம் இன்று திருக்கல்யாண உற்சவம்

ADDED : ஜன 08, 2025 11:28 PM
அன்னுார்; மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், சுவாமி புஷ்ப பல்லக்கில் அருள்பாலித்தார்.
அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில் 25ம் ஆண்டு தேர்த் திருவிழாவில் கடந்த 4ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு 7:45 மணிக்கு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் திருவீதியுலா புஷ்ப பல்லக்கில் நடந்தது. தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, கடைவீதி, ஓதிமலை ரோடு வழியாக இரவு 10:00 மணிக்கு மீண்டும் கோவிலை அடைந்தது.
இதில் கயிலை வாத்தியம் இசைக்கப்பட்டது. செண்டை மேளம் மற்றும் வான வேடிக்கையுடன் திருவீதியுலா நடந்தது. பக்தர்களை கவரும் வகையில் புஷ்ப பல்லக்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை விநாயகர், அம்மன், சந்திரசேகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி களுக்கு அபிஷேக பூஜை நடந்தது. இன்று காலை தேவார இன்னிசை நிகழ்ச்சியும், 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், பவளக்கொடி கும்மி நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை காலை 10:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.