/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரி - பஸ் மோதல்; 16 பேர் காயம்
/
லாரி - பஸ் மோதல்; 16 பேர் காயம்
ADDED : டிச 25, 2024 10:27 PM
போத்தனூர்; கோவை -- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று தனியார் மப்சல் பஸ் ஒன்று (பி.வி.டி., டிரான்ஸ்போர்ட், டி என் 41 ஏகே 8372), பொள்ளாச்சி நோக்கி சென்றது. மயிலேறிபாளையம் பிரிவு அருகே, முன்னால் சென்ற டிப்பர் லாரி, வலதுபுற சாலைக்கு செல்ல திருப்பியுள்ளார்.
இதனை கவனிக்காத பஸ் டிரைவர், லாரி மீது மோதினார். இதில் லாரி டிரைவர் திருப்பூரை சேர்ந்த கோவிந்தராஜ், 44, பஸ் பயணியர் ரமேஷ், 52, ஆஸாத், 20, பிரவீண், 23 உள்பட, 16 பேர் காயமடைந்தனர்.
அவ்வழியே சென்றோர், அனைவரையும் மீட்டு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செட்டிபாளையம் போலீசார், பஸ் டிரைவர் பொள்ளாச்சியை சேர்ந்த மாசியப்பன், 36 என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

