/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரி -பைக் மோதல்; வாலிபர் மரணம்
/
லாரி -பைக் மோதல்; வாலிபர் மரணம்
ADDED : ஜூலை 15, 2025 08:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோயம்பேடு மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 26. கோவை ஹோப்ஸ் காலேஜ் ஆர்கெஸ் நகரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில், எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில், தனது பைக்கில், நீலாம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த சரக்கு லாரியின் முன்பகுதியில் மோதியது.
இதில் பைக் நொறுங்கியது. பலத்த காயமடைந்த உமேஷ் கார்த்திகேயன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

