/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரி - பஸ் மோதல்; 4 பெண்கள் காயம்
/
லாரி - பஸ் மோதல்; 4 பெண்கள் காயம்
ADDED : மே 05, 2025 10:56 PM

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டியில் அதிகாலையில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில், நான்கு பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் செல்வராஜ், 50. இவர் தனக்கு சொந்தமான லாரியில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து பெயின்ட் லோடு ஏற்றிக்கொண்டு
கோவை மதுக்கரைக்கு வந்து கொண்டிருந்தார். நேற்று காலை, அவிநாசி ரோட்டில் உள்ள சென்னியாண்டவர் கோவில் அருகே லாரி வந்தது. அப்போது சேலத்தில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் வந்தது. டிரைவர் சிவ பெருமாள் பஸ்சை ஓட்டினார்.
முன்னால் சென்ற லாரியை பஸ் முந்த முயன்றபோது, லாரியின் பின்புறம், பஸ்சின் பக்கவாட்டு பகுதி மோதியது. இதில் பஸ்சில் இருந்த நான்கு பெண்கள் காயமடைந்தனர். பெயின்ட் டப்பாக்கள் ரோட்டில் சிதறின.
சம்பவ இடத்துக்கு சென்ற கருமத்தம்பட்டி போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

