/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனிம வளம் கடத்திய லாரி பறிமுதல்
/
கனிம வளம் கடத்திய லாரி பறிமுதல்
ADDED : மே 18, 2025 10:08 PM
அன்னுார் ; அன்னுார் அருகே கனிம வளம் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
அன்னுார் வட்டாரத்தில், அனுமதியின்றி மண் மற்றும் எம். சாண்ட் தயாரிப்பதற்கு தேவையான கற்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கோவை மாவட்ட கனிமவளத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் குமார், உதவி பொறியாளர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி காரனுாரில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் எந்தவித அனுமதியும் பெறாமல் எம் சாண்ட் தயாரிப்பதற்கு தேவையான கற்களை எடுத்து வந்தது தெரிய வந்தது.
அதிகாரிகள் நிறுத்திய உடன் டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு, அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.
அன்னுார் போலீசார், லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.