ADDED : செப் 22, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: கோவையில் இருந்து வால்பாறை சிவில் சப்ளை குடோனுக்கு அரிசி லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆழியாறு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 34. இவர் தனது லாரியில் கோவையில் இருந்து வால்பாறைக்கு, 10 டன் அரிசி லோடு ஏற்றி நேற்று காலை வந்தார். அய்யர்பாடி அருகே, காலை, 7:30 மணிக்கு லாரியின் இரு டயர்களும் பஞ்சரான நிலையில் ரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், டிரைவர் பிரகாஷ் லேசான காயமடைந்தார். இதனையடுத்து, வேறு லாரிகளில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு, சிவில் சப்ளை குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன. விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
