தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்


ADDED : செப் 22, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.

கரூரில், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில், விவசாயி ஒருவர் பலியானார்.

அப்போது, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் முருகசாமி நிருபர்களிடம், கூட்டுறவு சங்க பணியாளர்கள் ரேஷன் கடை பணியாளர்களுடன் இணைந்து விவசாயிகளிடம் வசூல் செய்ய சென்றனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் விவசாயி ஒருவர் பலியானார். மேலும், கூட்டுறவு சங்கத்தில் இருந்து இனி யாராவது வந்தால் செருப்பால் அடிப்போம், என, பேசிய வீடியோ வெளியானது.

இதனால் அதிருப்தி அடைந்த பணியாளர்கள், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கூறியதாவது:

அரசு சார்பில், விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் வீட்டுக்கு வசூல் செய்ய செல்லவில்லை. பயிர் கடன் தகுதியில்லை என அறிவித்த விவசாயிகளிடம் மட்டுமே கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கடன் தொகை வசூலிக்க சென்றனர்.

ஆனால், ஈசன் முருகசாமி கூட்டுறவு சங்கம் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களை தரக்குறைவாக பேசியது கண்டனத்துக்குரியது. இதை கண்டித்து, அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us