ADDED : அக் 17, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: அன்னுார் அருகே மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
அன்னுார் தாலுகா, துணை தாசில்தார் தெய்வ பாண்டியம்மாள், வருவாய் ஆய்வாளர் குருநாதன் ஆகியோர் வடக்கலூரில், புள்ளாமடை சாலையில் நேற்று மதியம் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது வந்த லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். டிரைவர் இறங்கி ஓடிவிட்டார்.
லாரியில் கிராவல் மண் நிரப்பப்பட்டிருந்தது. மண்ணுக்குரிய ஆவணம் எதுவும் லாரியில் இல்லை. இதையடுத்து, அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்டைத்தனர்.
வடக்கலூர் கிராம நிர்வாக அலுவலர் சுமதி அளித்த புகாரின் பேரில், அன்னுார் போலீசார் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.