UPDATED : அக் 15, 2026 05:21 PM
ADDED : அக் 15, 2026 05:17 PM

அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பி உரசியதில், தீப்பற்றி எரிந்து நாசமானது.
தஞ்சாவூரில் இருந்து, கோவை மாவட்டம், மத்தம்பாளையம் காளான் பண்ணைக்கு வைக்கோல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, கீழையூரை சேர்ந்த பாஸ்கரன், 34, ஓட்டி வந்தார். மத்தம்பாளையம் அருகில் வந்தபோது, சாலையின் குறுக்கே சென்ற மின்சார கம்பி உரசியதில், வைக்கோலில் தீப்பற்றி, லாரி எரிந்து நாசமானது.
பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
