தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ஓ.பி.சி. உரிமை கட்சி வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ஓ.பி.சி. உரிமை கட்சி வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ஓ.பி.சி. உரிமை கட்சி வலியுறுத்தல்


UPDATED : அக் 15, 2026 05:33 PM

ADDED : அக் 15, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 05:33 PM ADDED : அக் 15, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கட்சி துணை தலைவர் வெள்ளியங்கிரி, துணை பொது செயலாளர் குணசேகரன் ஆகியோர் , ஜனாதிபதிக்கு கலெக்டர் வாயிலாக கோரிக்கை மனு அளித்தனர்.

2027 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு அறிவித்தது. தற்போது மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட்ட இரு படிவங்களிலும், அரசு அங்கீகாரம் பெற்ற, ஓ.பி.சி., எஸ்.இ.பி.சி. வரிசை பட்டியலில் இல்லை.

1980 ல் எடுத்த இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் தொகை தரவுகளுக்கு பின், 46 ஆண்டாக எவ்வித தரவுகளும் எடுக்கவில்லை. இதனால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு கொடுத்த இட ஒதுக்கீடு பறிபோகும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்திய அரசியல் சாசன கட்டளையை அமல்படுத்த வேண்டும்.

தற்போது நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பினை நிறுத்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளடக்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த , ஜனாதிபதி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us