/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரி - ஆம்னி பஸ் மோதல்:10 பேர் படுகாயம்
/
லாரி - ஆம்னி பஸ் மோதல்:10 பேர் படுகாயம்
ADDED : டிச 10, 2024 07:15 AM

அவிநாசி: சென்னையில் இருந்து 39 பயணிகளுடன், ஆம்னி பஸ் ஒன்று கோவை புறப்பட்டது. நேற்று அதிகாலை திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே புதுப்பாளையம் பிரிவு அருகே பைபாஸ் ரோட்டில், கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற 'ஸ்கிராப்' ஏற்றிய லாரி மீது பலமாக மோதியது.
இதில் ஆம்னி பஸ் டிரைவர் பாலக்காடை சேர்ந்த சிபு, 47, சென்னை - மாதவரம் பிரகதீஷ், 22, சூலுார் மாருதி ஹவுஸ் பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி நித்யா, 40, மகன் கார்த்திக் ராஜா, 18, கோவைப்புதுார், நிதர்ஷா அவென்யூ நிர்மலா, 63, உமா, 59, பஸ் கிளீனர் மூணாறு பகுதி சுதர்சன், 18, கோவை வடவள்ளி அகிலா, 53, உள்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆம்னி பஸ் டிரைவர் துாக்க கலக்கத்தில், லாரி சென்றதை கவனிக்காமல் மோதியது தெரியவந்தது.

