/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இன்ஜினியர்களுக்கு நிறைய வாய்ப்புகள்'
/
'இன்ஜினியர்களுக்கு நிறைய வாய்ப்புகள்'
ADDED : ஆக 20, 2025 09:42 PM

கோவை; கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சந்திரயான்திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், ''உலகம் முழுவதும் இன்ஜினியர்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. மாணவர்கள் தங்களது துறையில் அடிப்படை நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, சமுதாயத்துக்கு பயன்படும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும்,'' என்றார்.
இன்டெல் கார்ப்பரேசன் நிறுவன தொழில்நுட்ப அதிகாரி ஸ்ரீராம் வாசுதேவன், ''மாணவர்கள் புத்தகப் படிப்புடன் நின்று விடாமல், தங்களது துறைகளில் நடைபெறும் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிசாமி, துணை தலைவர் இந்து முருகேசன், முதல்வர் ரமேஷ், துணை முதல்வர் மைதிலி பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர் என, மாநிலம் முழுவதும் இருந்து, 2,500 பேர் பங்கேற்றனர்.