/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலுக்கு தயாராகும் ஒலிப்பெருக்கி வாகனங்கள்
/
தேர்தலுக்கு தயாராகும் ஒலிப்பெருக்கி வாகனங்கள்
ADDED : மார் 20, 2024 12:10 AM
பொள்ளாச்சி;நட்சத்திர பேச்சாளர்கள் வந்தாலும், வராவிட்டாலும் கடுமையான வெயிலில் பிரசாரம் செய்ய ஒவ்வொரு வேட்பாளர்களும் வாகன ஒலிபெருக்கியை நம்பி களம் இறங்க உள்ளனர்.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல், ஏப்., 19ல் நடக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அடுத்த கட்டமாக தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரத்தில் இறங்க உள்ளனர்.
ஒவ்வொரு கட்சித்தலைவர்களும், வாகனங்களில் ஊர், ஊராக சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர். இதற்கென, பிரத்யேக சொகுசு வாகனங்கள் வடிவமைக்கும் பணி, நடந்து வருகிறது.
பொள்ளாச்சி தொகுதியை பொறுத்தமட்டில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டாலும், இக்கட்சிகளில், நட்சத்திர பேச்சாளர்கள் அதிகம் கிடையாது.
கடுமையான வெயிலையும் கண்டுகொள்ளாமல், ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர்களே ஓட்டு சேகரிக்க வேண்டும்.
கட்சிக்காரர்கள் கூறியதாவது:
தற்போது, கடுமையான வெயிலில் தொண்டர்கள் அதிகமாக பிரசாரத்திற்கு வரவும் தயங்குவர். இதனால், வாகன ஒலி பெருக்கி பிரசாரத்தையே வேட்பாளர்கள் அதிகம் நம்புவர்.
இதற்கென, பொள்ளாச்சி நகரில், ஒலிப்பெருக்கி வாகனங்களை தயார்படுத்தும் பணி வேகமெடுத்துள்ளது.
ஆடியோ, 'மைக் செட்' என, நாள் ஒன்றுக்கு, ஐந்து முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான வாடகையில், ஒலிப்பெருக்கி வாகனம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கட்சிப் பிரமுகர்கள், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, தங்கள் சாதனைகளை, அதன் வாயிலாக வெளிப்படுத்திக்கொள்வர். இனி வரும் நாட்களில், நினைத்த இடங்களில், கிராமங்கள் தோறும் இந்த வாகனங்கள் பயணிக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

