/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை மீது காதல்; செயலில் வேகம் மரங்களை வளர்க்கும் அரசு அதிகாரி
/
இயற்கை மீது காதல்; செயலில் வேகம் மரங்களை வளர்க்கும் அரசு அதிகாரி
இயற்கை மீது காதல்; செயலில் வேகம் மரங்களை வளர்க்கும் அரசு அதிகாரி
இயற்கை மீது காதல்; செயலில் வேகம் மரங்களை வளர்க்கும் அரசு அதிகாரி
ADDED : மார் 29, 2025 06:14 AM

சூலுார் : மரங்களை வளருங்கள் என சொல்பவர்கள் மத்தியில், நுாற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து பாதுகாத்து வருகிறார் இந்த அரசு அதிகாரி.
சூலுார் அடுத்த காங்கயம் பாளையத்தை சேர்ந்தவர் ஜோட்டி குரியன். தமிழக நெடுஞ்சாலைத் துறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார். இயல்பாகவே சமூக சேவை செய்வதில் ஆர்வம் காட்டி வரும் இவருக்கு மரங்களை வளர்ப்பதில், பாதுகாப்பதில் அலாதி பிரியம். சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்து பலருக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார்.
எலன் நகர் பகுதியில், மூன்று இடங்களில் ரிசர்வ் சைட்டுகள் இருப்பதை அறிந்த அவர், அங்கு மரக்கன்றுகளை நடவு செய்ய ஊராட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றார். மொத்தம், ஒரு ஏக்கர் பரப்பளவில், மா, பலா, கொய்யா, சீதா, சப்போட்டா, பப்பாளி, பலா என, நூற்றுக்கும் மேற்பட்ட பழ மரக்கன்றுகளை நடவு செய்து, அருகில் உள்ளவர்களின் உதவியோடு பராமரித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். தமிழகத்தில் அரசு பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகள் ஆகிறது. சிறு வயது முதலே இயற்கை மீது ஆர்வம்.
அதற்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டேன். ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்துள்ளேன். விமானப்படைத்தளத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தது மறக்க முடியாதது. மரம் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
காலை, 6:00 மணிக்கு பழ மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டபிறகுதான் அடுத்த வேலையில் ஈடுபடுவேன். பல தன்னார்வலர்கள் ஒத்துழைப்போடு அந்த மரஙக்ள நன்றாக வளர்ந்து வருகின்றன.
குழந்தைகளின் பிறந்த நாளில் மரக்கன்றுகளை நட ஊக்கப்படுத்தி வருகிறேன். அதனால், சிறுவர்களுக்கும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர், கூறினார்.