/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காதலியை கத்தியால் குத்திய காதலன்
/
காதலியை கத்தியால் குத்திய காதலன்
ADDED : பிப் 16, 2025 11:37 PM
மேட்டுப்பாளையம்; காரமடையை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் ஒரு வருடத்திற்கு முன்பு இவர் வேலை செய்த நிறுவனத்திற்கு அருகில் உள்ள துணிக்கடை உரிமையாளரின் மகன் உடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, காதலனின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை விட்டு பிரிநதார். இந்நிலையில், நேற்று முன்தினம் காரமடையில், இளம்பெண் நின்றிருந்த போது, அவரது காதலனும், அவரது நண்பரும் வந்து, அந்த இளம் பெண்ணை திட்டினர்.
காதலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை குத்த முயன்றார். தடுத்தபோது, பெண்ணின் வலது கையில் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில், காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.---