/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்த வாடகை வேளாண் கருவிகள் பூட்டிய அறையில் அடைத்து விரயம்
/
குறைந்த வாடகை வேளாண் கருவிகள் பூட்டிய அறையில் அடைத்து விரயம்
குறைந்த வாடகை வேளாண் கருவிகள் பூட்டிய அறையில் அடைத்து விரயம்
குறைந்த வாடகை வேளாண் கருவிகள் பூட்டிய அறையில் அடைத்து விரயம்
ADDED : டிச 03, 2024 11:38 PM

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், குறைந்த வாடகையில் வழங்கும் வேளாண் கருவிகள், பூட்டிய அறையில், பயனற்று வீணாகி வருகின்றன.
தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், தேவராயபுரம், தென்னமநல்லுார், ஜாகீர்நாயக்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டிணம், நரசீபுரம், இக்கரைபோளுவாம்பட்டி, மத்வராயபுரம், மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய, 10 ஊராட்சிகள் உள்ளன. சுமார், 25,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், புதுவாழ்வு திட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும், டிராக்டர், பவர் வீடர், பவர் ஸ்பிரேயர், ரோட்டவேட்டர், கல்டிவேட்டர், தென்னை மரம் ஏறும் கருவி, தீவனம் வெட்டும் கருவி, கடப்பாறை, மண்வெட்டி என, 15 வகையான வேளாண் கருவிகள், குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்க கொடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், ஒரு நாளுக்கு மண்வெட்டி, 5 ரூபாய், டிராக்டர், 600 ரூபாய், ரோட்டவேட்டர், 600 ரூபாய் என, தனியாரிடம் வாடகைக்கு எடுப்பதை விட, 4 மடங்கு குறைந்த விலையில் வாடகைக்கு வழங்கப்படுகிறது.
இதற்காக, வட்டார அளவில் ஒரு மேலாளரும், ஒவ்வொரு ஊராட்சிகளிலும், ஒரு கணக்காளர், சமுதாய வளப்பயிற்றுநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சில ஊராட்சிகளில், கணக்காளர், சமுதாய வளப்பயிற்றுநர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால், பல ஊராட்சிகளிலும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வேளாண் கருவிகள், அறையில் பூட்டி வைக்கப்பட்டு வீணாகி வருகிறது.
இத்திட்டம் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.