/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது குடிநீருக்கு பிரச்னை!சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை...
/
பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது குடிநீருக்கு பிரச்னை!சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை...
பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது குடிநீருக்கு பிரச்னை!சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை...
பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது குடிநீருக்கு பிரச்னை!சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை...
ADDED : பிப் 25, 2024 10:43 PM

மேட்டுப்பாளையம்:கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், பவானி ஆற்றில் நீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவ வாய்ப்புள்ளது.
மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சிறுமுகை வழியாக பவானி ஆறு செல்கிறது. பவானி ஆற்றில் பில்லுார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பில்லுார் அணைக்கு நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது.
கடந்த சில நாட்களாக பில்லுார் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை இல்லை.
இதன் காரணமாக பில்லுார் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 66 அடியாக உள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது குறைந்துள்ளது.
இதன் காரணமாகவும், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாத காரணமாகவும் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.
மேட்டுப்பாளையம் நகரத்திற்கு, நகராட்சி சார்பில் பவானி ஆற்றிலிருந்து தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, சாமன்னா நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பவானி ஆற்றில் தண்ணீர் மிகவும் குறைவாக செல்வதால் இனி வரும் நாட்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் நகர மக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் கூறுகையில், ''கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.
வரும் நாட்களில், குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், மேட்டுப்பாளையம் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.----

