/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எல் அண்டு டி எஜூடெக் நேரு கல்லுாரி ஒப்பந்தம்
/
எல் அண்டு டி எஜூடெக் நேரு கல்லுாரி ஒப்பந்தம்
ADDED : டிச 14, 2024 11:49 PM

கோவை: நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, எல் அண்டு டி எஜூடெக் உடன் இணைந்து, 'அகாடமிக் எக்சலன்ஸ்' என்ற கருத்தரங்கை, கல்லுாரி வளாகத்தில் நடத்தியது.
கல்வித்துறைக்கும், தொழில்துறைக்கும் இடையேஉள்ள இடைவெளியைக் குறைக்கும் அதே வேளையில், புதுமை மற்றும் எதிர்காலத் திறமைகளை வளர்ப்பதை, நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடந்தது. எல் அண்டு டி எஜூடெக் வியூகத் தலைவர் அன்புத்தம்பி, எதிர்காலத்திற்கான திறன்களுடன் மாணவர்களைத் தயார்ப்படுத்துவதன் முக்கியத்துவத்தை, வலியுறுத்தி பேசினார்.
இதில், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் எல் அண்டு டி எஜூடெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நேரு கல்விக் குழும நிறுவனங்களின், தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், செயல் இயக்குனர் நாகராஜா, நேரு தொழில்நுட்பக் கல்லுாரியின் முதல்வர் சிவராஜா, நேரு கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வர் அனிருத்தன் மற்றும் பேராசிரியர்கள்பங்கேற்றனர்.