/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுரையீரல் நோய் விழிப்புணர்வு வாக்கத்தான்
/
நுரையீரல் நோய் விழிப்புணர்வு வாக்கத்தான்
ADDED : நவ 20, 2024 10:51 PM

கோவை; நுரையீரல் நோய்களுக்கான தேசிய மாநாட்டை முன்னிட்டு, விழிப்புணர்வு வாக்கத்தான் நேற்று நடந்தது.
கோவையில் இன்று முதல் வரும், 24ம் தேதி வரை நான்கு நாட்கள் நுரையீரல் நோய்களுக்கான தேசிய மாநாடு 'நாப்கான் 2024' நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், விழிப்புணர்வு வாக்கத்தான் நேற்று நடந்தது.
நாள்பட்ட மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா ஆகிய சுவாசக் கோளாறுகள் அதிகரித்து வருவது குறித்து விழிப்புணர்வு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அவற்றை தடுப்பது குறித்தும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத் திருப்பது குறித்தும் இந்த வாக்கத்தான் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன்குமார் கூறுகையில்,''இவ்வாக்கத்தான் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒவ்வொருவரும் மாற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது, மேலும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது,'' என்றார்.
வாக்கத்தானில், மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் கார்த்திகேயன், கோவை ரெஸ்பரேட்டரி சொசைட்டி தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

