/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொகுசு விடுதி நிர்வாகம் இழப்பீடு வழங்க உத்தரவு
/
சொகுசு விடுதி நிர்வாகம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஆக 21, 2025 09:32 PM
கோவை; சரவணம்பட்டியை சேர்ந்த பத்மநாபன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து, ஆனைகட்டி பகுதியில் உள்ள எஸ்.ஆர். குரூப் தனியார் சொகுசு விடுதியில் தங்க முன்பதிவு செய்தனர். அதற்கு முன்பணம் செலுத்தினர். சொகுசு விடுதியில் தங்கியபோது, 'வைபை' இணைப்பு, முறையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை.
இழப்பீடு வழங்கக்கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'சொகுசு விடுதி நிர்வாகம், சேவை குறைபாடு செய்துள்ளதால், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்குச் செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.